கொரொனாவை எளிதில் கண்டறியும் முக கவசம்..!
கொரொனா தொற்றை கண்டறியும் சிறப்பு முக கவசத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஜப்பானில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறும் பொழுது முக கவசம் மீது நெருப்பு குலியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை தடவி பின்னர் அதன் மீது ஊதாக்கதிரை செலுத்தினால் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தால் அது ஒளிரும் என்றும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இத்தகைய முக கவசத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வர்த்தகரீதியான விற்பனைக்கு கொண்டு வர ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.






