ரேசன் கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு..!
நீலகிரியில் ரேஷன் கடையில் பாம்பு புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் கடையில் புகுந்த கட்டு விரியன் பாம்பை பார்த்து பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டு விரியன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். கடையில் பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






