25 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக நடிகை சினேகா புகார்..!
பிரபல நடிகர் பிரசன்னாவும் மனைவி சினேகாவும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருகின்றனர். நடிகை பிரசன்னாவிற்கு அண்மையில் அறிமுகமான தம்பதி மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கக்கூடிய எம்எஸ் கேலரி சிமெண்ட் என்ற கம்பெனியில் கடந்த மே மாதம் 25 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த தனியார் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சினேகாவும், அவரது கணவரும் நடிகருமான பிரசன்னாவும் சேர்ந்த முதலீடு செய்து 25 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
25 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக நடிகை சினேகா போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.






