நயன்தாராவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம்..!
டைரக்டர் யுவராஜ் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. இப்பொழுது அவருக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். போட்டாபோட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் படத்தில் நடிகை நயன்தாரா கமிட்டாகி இருந்தார்.
நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அங்கு ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பிரச்சனை போயி கொண்டிருந்ததால் டேட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் நயன்தாரா இல்லாத காட்சிகளை ஏற்கனவே எடுத்துள்ளதால் பாலிவுட் படங்களை முடித்துவிட்டு நயன்தாரா திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை.
அதனால் நயன்தாராவை விட்டுவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.






