--- --:--:-- --

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

2

டகிழக்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

 

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி,வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

தர்மபுரி மாவட்டத்தில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு களுக்கு மழையால் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon