வாட்ஸ் அப் உரையாடல்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக ஆரியன்கான் தெரிவிப்பு..!
போதைப்பொருள் வழக்கில் தனது வாட்ஸ்அப் உரையாடல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் இருக்கும் ஆரியன் கான் ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை தவறாக சித்தரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தனது வாட்ஸ்அப் உரையாடல்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் விளக்கம் கற்பனையாக உள்ளது எனவும் முடிவு தவறானவை என்றும் நியாயமற்றது என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு வர உள்ளது.






