குழந்தையை மடியில் வைத்து திருமணம் செய்து கொண்ட பெற்றோர்..!

டலூர் மாவட்டத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நபரை குழந்தை பிறந்த நிலையில் காவல்துறையினர் உதவியுடன் திருமணம் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கிராமத்தை வேல்முருகன் ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யக் கோரிய நிலையில் அவரது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பெண்ணுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை பெயரை குறிப்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அங்கு போலீசாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசார் வேல்முருகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வேல்முருகன் சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர்களின் திருமணம் அவர்களது பச்சிளம் குழந்தை முன்னிலையில் நடைபெற்றது.