தமிழகத்தில் ஆறாவது கட்டமாக   இன்று தடுப்பூசி முகாம் தொடங்கியது..!

மிழகத்தில் ஆறாவது கட்டமாக தடுப்பூசி முகாம்  இன்று தொடங்கியது. தமிழகமெங்கும் கொரொனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஐந்து கட்டங்களாக இந்த தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் அடுத்து ஆறாவது கட்டமாக மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது.

 

முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை செலுத்தத் தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகிலுள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.