மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழப்பு..!
நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து தம்பதியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பழனிவேலின் மனைவி ராஜலட்சுமி இருவரும் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காகவும் உணவு தயார் செய்வதற்காக ராஜலட்சுமி கொல்லைப்புறம் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் வீட்டில் வழியாக சென்ற உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து ராஜலட்சுமி மேல் விழுந்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு கணவர் ஓடியுள்ளார். அங்கிருந்து ஓடி வந்து மனைவியை காப்பாற்ற முயன்று மின்கம்பியை கையால் எடுக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்து மனைவியை அரவணைத்தவாறே இறுதி மூச்சை விட்டுள்ளார்.






