கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை அடுத்த நெமேலியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
சென்னையில் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி மற்றும் சென்னை கடற்கரை சாலையில் உள்ள நிலையில் தலா 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினசரி கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் நெம்மேலியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1,258 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விரிவாக்க பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
இந்த நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது காரில் புறப்பட்டு செல்லும் பொழுது வழிநெடுகிலும் இருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





