4 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை..!
தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் நான்காவது முறையாக அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்துள்ளார்.
சுகாஷ் சந்திரசேகர் அவரது மனைவி ஆகியோர் மீது குற்றம் சாட்டிய வழக்கில் முக்கிய சாட்சியான வனத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்குப் பின் இன்று வரை நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நான்கு முறையும் விசாரணைக்கு ஆஜராகாத அவர் தான் ஆஜராக முடியவில்லை என பதிலளித்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை அணுகலாம் என அமலாக்கத்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.






