ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக இன்று ஆலோசனை..!
சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஓமலூர் பத்தாவது வார்டுக்கு உட்பட்ட 10 ஊராட்சியை சேர்ந்த கிளை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள் கல்ந்து கொள்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.






