ஆற்றின் நடுவே சிக்கிய தம்பதி..!
ராஜஸ்தான் மாநிலத்தின் சரோகி மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடிய ஆற்றின் நடுவே சிக்கிய தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கரையை கடக்க முடியாமல் தம்பதி வெள்ளத்தில் சிக்கிய பொழுது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படகில் சென்று அவர்களை மீட்டுள்ளனர்.






