--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

8

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தென்மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon