மதுரையில் நடைப்பெற்ற 3-வது தேசிய எலக்ட்ராபாத் மாநாடு மற்றும் கருத்தரங்கம்..!
மதுரையில் இன்று, மதுரை டி.பி.,சாலை தனியர் விருந்தினர் மகாலில் மூன்றாவது தேசிய எலக்ட்ராபாத் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைப்பெற்றது. மாநாட்டிற்கு மது இன்ஸ்டிட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் தென்னிந்திய எலக்ட்ரோபாத் அசோசியேஷன் பேராசிரியர் டாக்டர் பரத் தலைமை வகித்தார்.
டாக்டர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் டாக்டர் சேது சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் குத்துவிளக்கேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சிறப்பு விருந்தினராக கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் (ஓய்வு) டாக்டர். பிரபாகரன் , உசிலம்பட்டி அரசு மருத்துவமனை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈஸ்வர ரமணன் , மது இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் டைரக்டர் லக்ஷிதா ஆகியோர் கருத்தரங்கில் சிறப்பு உரை நிகழ்த்தினர்.
டாக்டர்கள் நாகேந்திரன், சகாயராஜ் , சங்கர சுப்பிரமணியன், அம்புரோஸ் , பரத் உள்ளிட்ட ஏராளமானோர் மாநாட்டு நிகழ்ச்சி சிறப்புடன்
நடைபெற உதவினர். முடிவில் கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் டாக்டர் .யூசுப் மெளலானா நன்றி கூறினார்.





