மதுரையில் தமிழக முதல்வரை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மூன்றுமாவடி சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி புறநகர் மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமையில் மண்டல் தலைவர் பவர்ஸ்டார் பால்ச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய சிறுபான்மை அணிச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் , மாவட்ட தலைவர் சிரில் ராயப்பன் ,
மாவட்ட பொதுச் செயலாளர்கள் மூவேந்திரன் , மாதவக் கண்ணன் , கோவிந்த மூர்த்தி , நகர்புற , ஊரக வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர்
தமிழ் சங்கு , தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன் , வர்த்தப் பிரிவு மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் தங்கவேல் சாமி , துணைத்தலைவர் பிரபு ,
பிரதமர் மோடியால் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டப் பெற்ற
மேலமடை மோகன் உள்ளிட்ட அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் ,
பாஜக தொண்டர்கள் , பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதனையொட்டி ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





