தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி..!
சென்னை சூளைமேட்டில் பெயிண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த வழக்கில் திருப்பமாக தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில் பெயிண்டருக்கு பூச்சி மருந்து கொடுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்ததை அடுத்து தலைமறைவாக இருந்த அவரது மனைவி விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் வேறொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பை உடனே கைவிட செல்வம் வற்புறுத்தியதால் பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்






