--- --:--:-- --

மதுரை ஐஎன்டியுசி சார்பில் ரயில்வே ஊழியர் நல சங்கம் துவக்க விழா

69c35b11-3e31-49ec-bc56-423ea7dc6c68

மதுரை ஐஎன்டியுசி சார்பில் ரயில்வே ஊழியர் நல சங்கம் துவக்க விழா நடந்தது. பொதுச்செயலாளர் துரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க பொது செயலாளர் கேஎஸ்ஜி குமார், வரதராஜன், முத்துப்பாண்டி, ஏஎம் முருகன், ராமதுரை கலந்து கொண்டனர்.சட்ட ஆலோசகர் மாரியப்பன் முனியாண்டி ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரைசாமி, சுதீரன் வரவேற்றனர். பார்த்தசாரதி, தனசேகரன், காளிமுத்து, அலெக்சாண்டர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பொதுச் செயலாளர் துரை கூறியதாவது: ஒன்றிய பா.ஜ.க.,அரசு ரயில்வே நிர்வாகத்தை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கிறது. அதனை முறியடிக்க அனைத்து ரயில்வே ஊழியர் சங்கத்தினர் முன்வரவேண்டும். ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பலன்கள் வழங்கும்போது பிடித்தம் செய்யப்படும் வருமானவரியிணை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon