டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவிற்கு நீதி கேட்டு மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் முகமது கவுஸ்,மாநில அமைப்பு செயலாளர் காதர் மொய்தீன்,தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நஜீமாபேகம், லியாக்கத்அலி, விஜயராஜன், அப்துள் ரஃபி உட்பட 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




