--- --:--:-- --

செல்போனை விழுங்கி நபர்..! உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

4

கொசோவா நாட்டில் இளைஞர் ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவாலில் உள்ள கிறிஸ்டினா நகரை சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் நோக்கியா செல்போனை விழுங்கி விட்டார்.

 

இதனையடுத்து செல்போனை விழுங்கிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பயிற்சி மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது செல்போன் மூன்றாகப் பிரிந்து இருந்ததைக் கண்டறிந்தனர். செல்போன், பேட்டரி என தனித்தனியாக பிரித்து இருந்தது அந்த இளைஞருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கருதினார்.

 

ஏனென்றால் செல்போன் பேட்டரி வயிற்றுக்குள் செல்லும் பொழுது அது உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே செல்போனை வயிற்றில் இருந்து அகற்றினார். அதாவது வயிற்றில் எதுவும் செய்யாமல் வாய் வழியாகவே செல்போன் எடுக்கப்பட்டது.

 

இதற்காக மருத்துவர்களுக்கு இரண்டு மணி நேரம் தேவைப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் குறித்தும் அதை வெற்றிகரமாக வயிற்றில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் மருத்துவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ஆனால் அந்த இளைஞர் செல்போனை எதற்காக விழுங்கினார் என்ற காரணத்தை மருத்துவர் வெளியிடவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon