--- --:--:-- --

திருவாரூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரொனா தொற்று..!

5

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ, மாணவிகள் மற்றும் 15 ஆசிரியர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

 

நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அடியக்கமங்கலத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி, நீடாமங்கலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன், வலங்கைமானில் மாணவி, தலைக்காடு பகுதியில் ஒரு மாணவர் என நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதியன்று கணினி பயிற்சிக்காக மலையூர் சென்று ஆசிரியர்கள் 15 பேரும் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon