--- --:--:-- --

நிலை தடுமாறி கீழே விழுந்த காவலர் மீது ஏறி இறங்கிய பேருந்து..!

10

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த போக்குவரத்து தலைமை காவலர் பாரிகடில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

திருமங்கலத்தை சேர்ந்த ராஜசேகரன் என்ற காவலர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவர் செல்போனை எடுக்க முயன்ற போது கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து ராஜசேகரின் மீது ஏறி இறங்கியது.

 

ஹெல்மெட் அணிந்து இருந்தபோதும் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார், பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுக்க முற்பட்டு கவனக்குறைவால் வந்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon