கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொரொனா பரவும் அபாயம்..!
கேரளாவில் கொரொனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு எல்லையில் அனைத்து நுழைவு வாயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்த மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு இ பாஸ், 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை கண்காணிக்க குமரி மாவட்டத்தில் களியக்காவிளை ஆகிய பகுதிகளில் காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நுழைவு பாதை வழியே எந்தவித பரிசோதனையும் இன்றி தினமும் ஏராளமான வாகனங்களில் கேரளாவிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் கேரளாவில் தினமும் சென்று வருகின்றனர்.
இதனால் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






