இரவு 10மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு..!
கேரளாவில் கொரொனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவித்திருக்கும் நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் இரவு ஊரடங்கை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 33 ஆயிரத்து 265 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 153 பேர் உயிரிழந்த நிலையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




