--- --:--:-- --

நூற்றுக்கணக்கில் குவிந்து கிடக்கும் ஜெல்லி மீன்கள்..!

4

கருங்கடல் பகுதியில் உள்ள தீபகற்பத்தில் வழக்கத்திற்கு மாறாக ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளால் கடலில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

வறண்ட வானிலை காரணமாக ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் நீர் அளவு குறைந்து உப்பு படலங்கள் அதிகமாக காணப்படுவதால் ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடற்கரைகளில் சிப்பிகள் கிடைப்பது போல ஜெல்லி மீன்கள் குவிந்து கிடப்பதால் கடலில் குளிக்க முடியவில்லை என்று சுற்றுலா பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon