--- --:--:-- --

மூன்று குழந்தை பெற்றுக் கொண்டால் சலுகை வழங்கப்படும்..!

If you're a kid and another to play is fun, but if two is more fun.

If you're a kid and another to play is fun, but if two is more fun.

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் தம்பதிகள் மூன்று குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சீனாவில் 1980களில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நாம் இருவர் நமக்கு ஒருவர் என ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே அறிமுகமானது. இதனால் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

 

இதனை தொடர்ந்து 2016 சீன அரசு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கைப்படி தம்பதியர் இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. எனினும் அதிகரித்து வரும் வாழ்வியல் செலவினங்கள் காரணமாக சீன மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

 

இதனால் சீனாவில் இளம் வயதினரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து முதியோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. திருமணமான தம்பதிகள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மூன்று குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு நிதி, காப்பீடு கல்வி, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பல்வேறு சலுகைகளை வழங்கி புதிய சட்டம் வகை செய்கிறது. இந்த சலுகைகள் காரணமாக குழந்தை பிறப்பு அதிகாரிக்கும்  என கருதுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon