--- --:--:-- --

கொரோனா பணியில் உயிர் நீத்த மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது..!

5

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த மதுரையை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவுரவித்தார்.

 

நோயாளிகளுக்கு வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வந்த அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கடந்த மே மாதம் உயிரிழந்தார். அவரது தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டும் வகையில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது.

 

கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடமிருந்து சண்முகப்பிரியாவின் கணவர் சண்முகப் பெருமான் விருதினை பெற்றுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon