நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷ்யாம் கைது..!
நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிடும் பல வீடியோக்களில் மீராமிதுன் உடனிருந்தவர் அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷ்யாம்.
சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டு வருவதால் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடைய பட்டியலினத்தவர் பற்றி பேசியதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த புகாரில் அபிஷேக் ஷ்யாம் கைதான நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






