20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தற்கொலை முயற்சி..!
சீர்காழி அருகே ஊர் திருவிழாவில் கலந்து கொண்டதால் 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் மனமுடைந்த குடும்பத்தார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடுவாய் கிராமத்தில் பிறந்த ராமன் என்பவருக்கு 15 வயதில் மகளும் பத்து வயதில் மகனும் உள்ளனர். ஏற்கனவே சில காரணங்களுக்காக ஊர் பஞ்சாயத்தார் ராமலிங்கம் குடும்பத்தாரை 5 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருவிழாவில் அவர் தனது பிள்ளைகளுடன் கலந்துகொண்ட வேளையில் அவருக்கு திருவிழா மரியாதை செலுத்த பட்டதாக தெரிகிறது. இதனால் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி இருவரையும் ஊர் பஞ்சாயத்தார் 20 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விஷமருந்திய நிலையில் மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






