பகத் பாசிலுக்காக விக்ரம் ஸ்பெஷல் போஸ்டர்..!
நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தில் இருக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பகத் பாசிலின் பிறந்தநாளை ஒட்டி விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






