--- --:--:-- --

காவலர்களின் வேட்டியை அவிழ்த்து விடுவேன் என மிரட்டி வீடியோ வெளியிட்ட நபர்..!

9

ஞ்சம் வாங்கிய காவலர்களின் வேட்டியை அவிழ்த்து விடுவேன் என மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மிரட்டிய சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.து தஞ்சாவூர் மாவட்டம் குலசேகரநல்லூரை சேர்ந்தவர் சுப்பராயன்.

 

இவர் அந்தப் பகுதி காவல் துறையினருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய அவரது மூன்று டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இதனை அறிந்த அவர் காவல் நிலையம் சென்று லஞ்சம் பெற்ற காவல்துறையினரை அவதூறாக பேசி வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் லஞ்சம் பெற்ற காவலர்களின் வேட்டியை அவிழ்த்து உள்ளே வைத்து விடுவேன் என்றும், முடிந்தால் என்னை தொட்டு பாரு எனவும் மிரட்டியுள்ளார்.

 

சுப்புராயன் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய காவலர்களையும் விரட்டி வீடியோ வெளியிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon