--- --:--:-- --

கார் ஓட்டுனரை இளம்பெண் தாக்கிய வீடியோ வைரல்..!

3

லக்னோவில் கார் ஓட்டுனரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

 

பெண் ஒருவர் சிக்னலில் சாலையை கடந்து செல்லும் பொழுது அவர் அருகே வரும் கார் ஒன்று சிக்னலில் நிற்கிறது. கார் ஓட்டுனரை அந்த பெண் தாக்குகிறார். கார் ஓட்டுநரை தாக்கும் காட்சி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

கார் மீது மோதி விட்டதாக கூறி ஓட்டுநரை அந்த பெண் தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை என மற்றொரு தரப்பினர் சமூக வலைதளங்களில் வாதிட்டு வருகின்றனர். கார் ஓட்டுநர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று அந்த பெண்ணை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon