கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஜிம்பாப்வே வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பேய் பிடித்து விட்டதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஜிம்பாப்வேக்கும், வங்கதேசத் துக்கும் இடையே டி20 கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்தது.

 

இந்த தொடரின் கடைசி போட்டி ஜூலை மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வங்கதேச அணி பேட்டிங் செய்தது. 18வது ஓவரில் போது முகமது சைபுதீன் பேட்டிங் செய்துள்ளார். டென்சர் என்ற வீரர் பந்துவீசினார். 5-வது பந்தை அடித்து விளாசினார் சைபுதீன்.

 

அப்போது திடீரென ஸ்டம்பின் மீது இருந்த கட்டை தானாகவே கீழே விழுந்து ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது. காரணம் பேட்ஸ்மேன் ஸிடம்பில் இருந்து சற்று தள்ளியே நிற்கிறார்.

 

பேட்டை கொண்டு ஸ்டெம்பை தட்டவுமிமில்லை. ஆனால் ஏதோ ஒன்று கீழே விழும் சத்தம் கேட்டது சட்டென திரும்பி பார்த்தார் சைபுதீன். நடுவர்களும் திரும்பி பார்த்தனர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. ஒருகணம் திகைத்து நின்றனர். 3வது அம்பயர் பார்த்தபோதுதான் தானாகவே கீழே விழுந்தது தெரியவந்தது.


Leave a Reply