கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கோவையில் கடந்த 5 நாட்களாக போராடி உயர்ந்து வருவதால் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு 266 ஆக அதிகரித்துள்ளது .தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

புகழ்பெற்ற 4 கோவில்களில் எட்டாம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

கிராஸ்கட் 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

உணவகங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சந்தைகளிலும் சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனை சான்று, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply