நாய் உயிரிழந்ததால் கதறி அழுத முதல்வரின் வீடியோ வைரல்..!
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செல்லமாக வளர்த்து வந்த நாய் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தது. அந்த துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காணொளியை பகிர்ந்த பலர் விலங்குகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட நபர் முதல்வராக பதவியேற்றது சிறப்பானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.






