ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை..!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நாளையோடு முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்த நிலையில் பள்ளி கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட உள்ளது.
அதை போல் திரையரங்குகள், மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சரிடம் கேட்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்டங்களுக்கு தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






