--- --:--:-- --

பவர் ஸ்டாரை திருமணம் செய்துள்ளாரா வனிதா..?

11

டிகை வனிதா விஜயகுமார் பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. வனிதா விஜயகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் திருமண கோலத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

அதில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கழுத்தில் மாலை அணிந்த நிலையில் வனிதாவுக்கு மாலை அணிவிக்கிறார். சினிமா ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா இல்லை உண்மையாகவே பவர்ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 

அதே நேரத்தில் திருமணம் செய்துகொண்டதாக கருதிய சில ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மூன்றாவது கணவரை விட்டு பிரிந்து விட்டார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon