மட்டன் வாங்கினால் குடம் இலவசம் என்ற அறிவிப்பால் மக்கள் ஆர்வம்..!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் தென் மாவட்டங்களில் போன்று கடையை பிரபலப்படுத்தும் வகையில் ஆட்டிறைச்சி வாங்கினால் குடம் இலவசம் என்ற அறிவிப்பால் மட்டன் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .
சூலூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஆட்டு இறைச்சி கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடையை பிரபலப்படுத்தும் நோக்கில் தென்மாவட்டங்களில் செய்வது போன்ற இறைச்சி வாங்கினால் குடம் மற்றும் தேங்காய் ஆகியவை இலவசமாக கொடுப்பதாக பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கறிக்கடையில் ஆட்டுக்கறி வாங்க பொதுமக்கள் கூறுகின்றனர்.






