காரை ஷோ ரூமிலிருந்து வாங்கிய நொடியே ஏற்பட்ட விபத்து..!
தெலுங்கானாவில் ஷோ ரூமிலிருந்து தனது புத்தம் புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் தவறுதலாக கியரை மாற்றி ஆக்சிலேட்டரை இயக்கியதால் முதல் தளத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று ஹைட்ராலிக் மூலம் முதல் தளத்தில் இருந்து தரை தளத்தில் இறங்க தயாராக இருந்தது. அப்போது புதிதாக வாங்கிய காரில் ஏறி அமர்ந்திருந்த வாடிக்கையாளரிடம் காரின் சிறப்பம்சங்கள் குறித்து விற்பனையாளர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரை டிரைவ் மூட்க்கு மாற்று ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சென்று முதல் தளத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது. கார் கவிழ்ந்ததில் கீழே நின்றிருந்த ஒரு காரும் 4 இருசக்கர வாகனங்களும் நொருங்கின.
காருக்குள் இருந்த வாடிக்கையாளரும் கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




