--- --:--:-- --

பக்ரீத் – மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரவு

5

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுகிறது.

 

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட கூடாது. குர்பானிக்காக மாடுகள் மற்றும் மரங்களை வெட்டக்கூடாது.

 

பொது இடங்களில் குருவானி நிகழ்வுகள் நடத்தக்கூடாது என பல்வேறு அதிரடி உத்தரவுகளை யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணமாக தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon