பழனியில் கேரள பெண் பலாத்காரம்..!
கேரள பெண் பலாத்காரம் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளார். கணவருடன் சென்ற கேரளப் பெண்ணை பழனி பேருந்து நிலையம் அருகே 3 பேர் கடத்தி சென்று தங்கும் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் கேரள போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சம்பவம் நடந்ததாக கூறப்படும் பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.






