--- --:--:-- --

சூரியனில் வீசும் புயலால் பூமியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு..!

2

சூரியனில் வீசும் புயலால் பூமியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியின் வெளிப்புற வெளிமண்டலத்தில் வெப்பம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைகோள் தொலைக்காட்சிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பூமியின் காந்தப்புலம் ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுவதால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon