இயக்குனர் ஷங்கருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


யக்குனர் ஷங்கருக்கு எதிராக லைக்கா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியன் படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி சஞ்சய் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது. இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்க அல்ல என்று கூறி லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Leave a Reply