தினசரி கொரொனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதா..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கேரளாவில் கொரொனா தொற்று பரவல் கவலை அளிக்கும் வண்ணம் அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் தினசரி சராசரியாக 11 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 70% ஆகும். இதன் காரணமாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடும், கர்நாடகாவும், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

மாநிலத்தில் கொரொனா அதிகரிப்பதன் காரணம் கண்டறியப்படவில்லை. மாநிலத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

 

கேரளாவின் பத்தனம்திட்டா மற்றும் பாலக்காட்டில் மூன்று கிராமங்களில் அதிகமாகி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் மும்மடங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply