இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டும் பிரபலம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்தியாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டும் பிரபலம் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். உலக அளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருவாய் ஈட்டும் அவர்கள் பட்டியலில் 19வது இடத்துக்கு விராட்கோலி முன்னேறியுள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் 12 கோடியே 50 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்டுள்ள விராட் கோலி வணிகரீதியில் ஒவ்வொரு பதிவின் மூலம் 5 கோடி ரூபாயை வருவாயாக பெறுகிறார்.

 

இந்த பட்டியலில் 6.4 கோடி பின்தொடர்பவர்கள் உடன் 27வது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒவ்வொரு பதிவுக்கும் மூன்று கோடி ரூபாயை வருவாயாக பெறுகிறார்.

 

கிட்டத்தட்ட 30 கோடி பின்தொடர்பவர்கள் உடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோ ஒவ்வொரு பதிவிற்கும் 11 கோடி ரூபாயை வருவாயாக பெறுகிறார்.


Leave a Reply