மன உளைச்சாலால் ஒரு கிலோ அளவிலான முடியை சாப்பிட்ட மாணவி..!
விழுப்புரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோ அளவிலான முடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வரும் அவர் அடிக்கடி தலையில் கைவைத்துள்ளார்.
இதனிடையே வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் ஒரு கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி உள்ளனர்.
எண்டோஸ்கோபி மூலம் எடுத்ததாகவும் ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சாப்பிட்டதும் தெரியவந்தது. மாணவிக்கு கவுன்சிலிங் அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.






