மும்பையில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளி திறப்பு..!
மும்பையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மகா சக்தி அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் 25 பேர் கல்வி பயில்கின்றனர்.
சமூகத்தில் இனப்பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக தெரிய வந்த போதிலும் உண்மையில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.






