சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்த தாய்..!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்த தாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுபலட்சுமி மணிகண்டன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார்.
இதற்கு சுப்புலட்சுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வீட்டிலிருந்து சுபலட்சுமியை அவரது தாய் கஸ்தூரி வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அப்போது சத்து மாத்திரை என கூறி தனது மகள் சுப்புலட்சுமி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு சுப்புலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவரது கணவர் மணிகண்டன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சுபலட்சுமி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சுப்புலட்சுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது விசாரணையில் தாய் கொடுத்தது கருக்கலைப்பு மாத்திரை என தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் சுபலட்சுமி புகார் அளித்தார்.






