--- --:--:-- --

வகை 3இல் உள்ள மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன..?

8

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் ஜவுளி மற்றும் நகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

துணிக்கடைகள், நகைக்கடைகள், குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. வணிக வளாகங்கள், உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு உள்ள விளையாட்டு அரங்குகள் திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்க படுவதாகவும் அர்ச்சனை, குடமுழக்கு, திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

 

காலை 6 மணி முதல் 9 மணி வரை விளையாட்டு பயிற்சி கூடங்கள் இயங்கும் பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon