தங்கை தாயையும் ஆபாச படமெடுத்து அனுப்பகூறி மிரட்டிய காதலன்..!
திருச்சியில் காதலியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அனுப்பியதோடு பெண்ணின் தாய், தங்கையின் ஆபாச படங்களையும் எடுத்து தர சொல்லி மிரட்டிய சில்மிஷ காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்ப நண்பரான சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே சதீஷ் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த காதலி பின்னர் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்து சதீஷிடம் பழகுவதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து காதலித்த பெண்ணையே மணந்து கொண்டார் சதீஷ்.
இந்த நிலையில் முன்னாள் காதலியை தொடர்புகொண்டு சதீஷ் தன்னுடன் பழகவில்லை என்றால் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் தாய், தந்தையை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்து தரும்படியும் மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




